சமூக வலைத்தளங்களில் பொதுமக்களையும் பாதுகாப்புத் துறையினரையும் தவறான முறையில் வழிநடாத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
முகநூல், வட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் இணையத்தளம் என்பவற்றின் ஊடாக போலியான தகவல்களை வெளியிட்டு மக்களை தவறாக முறையில் வழிநடாத்துபவர்களை இனம்காண பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்க சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.