கேரளாவில் திருமணமான பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் நபர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று தானும் உடல் சிதறி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவர் மனைவி அமினா (37). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் நாற்காலி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு நாசர் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்ற நிலையில் அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பென்னி மற்றும் அமினா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் விசாரித்த போது நாசரின் மனைவி அமினா மீது பென்னிக்கு காதல் மலர்ந்துள்ளது.
ஆனால் இந்த காதலை அமினா ஏற்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பென்னி அமினா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அங்கு சென்றார்.
பின்னர் தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை அமினாவை கட்டிபிடித்த நிலையில் வெடிக்க செய்துள்ளார்.
இதில் இருவரும் உடல் சிதறி பலியானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.