சாய்மருதில் கைப்பற்றபட்ட ட்ரோன் கேமரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

சாய்மருதில் கைப்பற்றபட்ட ட்ரோன் கேமரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்களால் புலன் விசாரணைகள்மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக டிரோன் கமெராக்களில் குண்டுகளைப் பொருத்தி ஆள் இல்லாத விமானம் போல் அதனைச் செயற்பட வைத்து ரிமோட் கன்ரோலர்கள்மூலம் குண்டுகள விடுவித்து தாக்குதல் நடத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட முனைந்துள்ளமை தெரியவந்துள்ளது


குறிப்பாக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூடும் இடங்களிலேயே இம்மாதிரியான தாக்குதல் நடத்தப்படவிருந்தமை தெரியவந்திருக்கிறது.

இதேமாதிரி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளமை தெரியவந்திருக்கிறது.


இதேவேளை நேற்றையதினம் சாய்ந்தமருதில் தீவிரவாதிகளின் முகாம் முற்றுகையிடப்பட்டபோது அங்கிருந்து டிரோன் கமெராவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தகதாகும்.