வெடிகுண்டு மிரட்டலால் தமிழகத்தில் பரபரப்பு.. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இறங்கிய பொலிசார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

வெடிகுண்டு மிரட்டலால் தமிழகத்தில் பரபரப்பு.. மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இறங்கிய பொலிசார்!



தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் மாநிலம் முழுவதும் பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பேருந்து நிலையத்தில், பொலிசார் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் பொலிசார் அங்கு சோதனை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி, கோவை பிரிவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.