புத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நடத்துனர் ஒருவர் ஆனமடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவ - மஹாஉஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக வகுப்புக்காக ஆனமடுவ பிரதேசத்திற்று சென்ற மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி தான் சேவை செய்யும் பேருந்தில் அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இந்தியாவில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது