குடும்பப்பிணக்கை விசாரிக்க சென்ற பொலிஸ் அலுவலர் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (8) இரவு இந்த சம்பவம் அச்சுவேலியில் இடம்பெற்றது. தாக்கப்பட்ட பொலிஸ் அலுவலர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளிநாட்டில் இருந்து வந்த கணவருக்கும், மனைவிக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாகியது. இருவரும் மல்லுக்கட்டியதையடுத்து, அயலவர் ஒருவர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். இதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு சென்றார்.
தம்பதியினரை சமரசம் செய்ய முயன்ற பொலிஸ்காரரை, கணவர் கடுமையாக தாக்கியுள்ளார். பொலிஸ்காரரின் சீருடைம் கிழிந்தது. மனைவியுடனான கோபத்தையெல்லாம் பொலிஸ்காரரில் காட்டி, அவரை நையப்புடைத்துள்ளார். ஒருவழியாக காப்பாற்றப்பட்ட பொலிஸ்காரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர