கரும்புத் தோட்ட வேலை... பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் அவலம்: அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

கரும்புத் தோட்ட வேலை... பெண்களின் கர்ப்பப்பைகளை நீக்கும் அவலம்: அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக வெளியான தகவல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கரும்பு விவசாயத்துக்கு பெயர்போனது. பெரும்பாலான மக்கள் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது.

அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். அதைக் காரணமாக வைத்து கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்ததாரர்கள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய பெண் ஒருவர், எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம் என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஹாஜிப்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது தற்போது அம்பலமாகியுள்ளது.

கர்ப்பப்பையை நீக்குவதால் ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.