சொந்த தம்பியின் கையாலே அண்ணன் துடி துடித்து மரணம்...ஈழத்தை உலுக்கிய சோக சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

சொந்த தம்பியின் கையாலே அண்ணன் துடி துடித்து மரணம்...ஈழத்தை உலுக்கிய சோக சம்பவம்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கழிந்தாலும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டம் முடிந்தபாடில்லை.தினம் தினம் வாழ்வாதாரத்திற்காய் அலைந்து திரியும் தமிழர்களின் வாழ்வில் உணவுக்காக உழைக்க வேண்டும் என்ற போராட்டம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள மயிலத்தமடு பகுதிக்கு வருமானம் ஈட்டச் சென்ற சகோதரர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தம்பியின் தோளில் கிடந்த கட்டுத் துவக்கு வெடித்ததில் முன்னால் சென்ற அண்ணன் பலியாகி உள்ளார்.முறக்கொட்டாஞ்சேனை. பாடசாலை வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி கருனாகரன் (26) என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியானவர் ஆவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பலியானவரின் மனைவி யோகநாதன் நிலோஜினி என்பவரிடம் ஈரளக்குளம் பெரியவெட்டுவானிலுள்ள அம்மா வீட்டுக்கு சென்று அங்குள்ள குளத்தில் மீன் பிடித்து வருவதாக சொல்லி மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார் கருனாகரன்.

காலை 11.00 மணியளவில் அம்மாவின் வீடு சென்ற இவர், தனது தம்பி சுசிதரனை அழைத்துக்கொண்டு வீச்சு வலையுடன் "அத்தியாண்டமாரிக் குளத்துக்கு " சென்று மீன் பிடிக்க வலை வீசிய போது, மீனுக்கு பதிலாக வலையில் முதலை மாட்டிக்கொண்டதால், தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் அம்மாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.

பகலுணவை உட்கொண்டுவிட்டு அம்மா வீட்டிலேயே உறங்கிய இவர், பிற்பகல் 04.00 மணியளவில் எழுந்து மீண்டும் மீன்பிடிக்க "ஆவெட்டியா குளத்துக்கு " செல்வதற்காக மருங்கப்பள்ளம் பகுதியில் மாடு கட்டிக்கொண்டிருந்த தம்பி சுசிதரனை அழைத்தபோது

இவர்களது தந்தையான பொன்னுத்துரை கணேசமூர்த்தி குறுக்கிட்டு,அப்பகுதியில் யானைகளின் நடமாட்டமிருப்பதால் செல்லவேண்டாமென தடுத்துள்ளார்.

"இல்லை அப்பா வருகின்ற சித்திரைக்கும் செலவுக்கு பணமில்லை மீன் பிடித்து விற்றாவது பணம் எடுப்போம் என்றுதான் போகப்போறன்" என்று கூறியுள்ளார்.கவனமாக போய் வாருங்கள் என தகப்பன் அனுப்பிவைத்துள்ளார்.

அதன் பின்னர் தம்பி சுசிதரனும் இவரும் வலைகளை எடுத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் குளத்தை நோக்கி சென்று, பாதை சரியில்லாததால் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாமல் ஓரிடத்தில் வைத்துவிட்டு வலையை தூக்கிக்கொண்டு மைலந்தனை காட்டு வழியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போது,

ஓரிடத்தில் வைத்து தம்பியை நிற்கச் சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்ற இவர் சிறிது நேரத்தில் கட்டுத் துவக்கு ஒன்றுடன் வந்து,

யானையின் பாதுகாப்புக்கு இது தேவையென கூறி தொடர்ந்து காட்டுவழியால் நடந்து கொண்டிருக்கையில்,வலையை தூக்கிச் செல்ல பாரமாகயிருப்பதாக தம்பி சொல்ல,உடன் வலையை இவர் வாங்கியெடுத்து, கட்டுத்துவக்கை தம்பியிடம் கொடுத்து இதனை தோளில் வைத்துக்கொண்டு வா என்றிருக்கிறார்.

அண்ணண் முன்னுக்கு செல்ல, தம்பி பின்னால் சென்றுகொண்டிருக்க,. காட்டுக்குள் குனிந்து செல்லக்கூடிய இடமொன்றினூடாக செல்ல முயற்சிக்கையில் தம்பியின் தோளிலிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அண்ணணின் முதுகுப்புறத்தை துளைத்துச் சென்றதால் முதுகிலும், நெஞ்சிலும் ஏற்பட்ட காயத்தினூடாக இரத்தம் வழிந்தோ,

தந்தைக்கு தகவலை அறிவித்து, அவரும் சம்பவ இடத்துக்கு வர,மோட்டார்சைக்கிளில் தூக்கி ஏற்றிக்கொண்டு மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் மரணித்துள்ளார்.

வாழ்வாதாரத்துக்கான போராட்டம் ஒரு உயிரையே பறித்துவிட்டது.பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, மரண விசாரணை அதிகாரியின் கட்டளைக்கு அமைய கரடியனாறு பொலிசாரால் சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என கரடியணாறு பொலீசார் தெரிவித்துள்ளனர்