புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரான தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவை வழங்கியிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததனூடாக தாங்கள் அவ்வியக்கத்தினை ஒழிப்பதற்கு உதவியதாக ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகள் இயக்கம் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு பிரித்தானியாவில் சுகபோகம் அனுபவித்த கஜேந்திரன்,
அங்கிருந்து இலங்கை அரசிற்கு உதவியதாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டு இலங்கை வந்ததாகவும் பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்.
மேலும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்து தெரிவித்த கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள கிராம புரட்சி என்ற 'கம்பெரலிய திட்டத்தை' சிபாரிசு செய்வதாகவும் சாடுகின்றார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காது தொடர்ந்து காலத்தைக் கடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் நெருங்கி வருவதால், அந்தத் தேர்தல்களில் வாக்கு வங்கிககளை அதிகரித்துக்கொள்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
தமிழ் மக்களை ஏமாற்றி தமக்கான வாக்கு வங்கிகளை அதிகரித்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டத்திற்கு பேராதரவை வழங்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகின்றார்.