தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 22, 2019

தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது!

கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல், தாக்குதல் நடத்திய நபர்களால் பயன்படுத்தப்பட்ட தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

அந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே தற்கொலைக் குண்டுதாரி, இறப்பதற்கு முன்னதாக தனது தாயாருக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில், தன்னை மன்னித்து விடுமாறு அவர் தாயாரிடம் கேட்டுள்ளார் என்றும், தனது மதத்தின் பெயரால் இந்த தாக்குதலை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.