பரிஸில் கடந்த சில வாரங்களாக பிக்பொக்கட் கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும், திருடர்களிடம் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருடர்கள் தனி நபர்களாகவும் குழுவினராகவும் இணைந்து பரிஸ், மெட்ரோ மற்றும் RER களில் பயணிக்கும் பொதுமக்களின் பெறுமதி மிக்க தொலைபேசிகள், பணப்பைகள் போன்றவற்றை கொள்ளையிடுகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழுகின்றன. அவர்களை பொறுத்தவரை தம்மை பாதுகாக்கும் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
இதேவேளை, விசேடமாக புதுவருட காலப்பகுதியில் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் மெல்பேர்ன் நகரத்திற்கு அருகில் அதிகமாக சுற்றித்திரிகின்றனர்.
புதுவருடத்தை முன்னிட்டு நுகர்வோர் அதிகமான பணத்தை பைகளில் எடுத்து கொண்டு வருகின்றனர். திருடர்கள் பைகளில் உள்ள பணத்தை திருடி செல்வார்கள்.
தங்க சங்கிலி போன்றவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், அதேபோன்று தங்கள் வாகனங்களை நிறுத்திய பின்னர் அது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.
பொருட்கள் கொள்வனவு செய்ய செல்லும் போது வாகனத்திற்குள் இன்னுமொருவரை விட்டு செல்வது நல்லது.
மேலும், தொடருந்து வாசலில் நின்று போன் கதைப்பது, முதுகிலே உள்ள பை திறந்துள்ளதா? மூடியுள்ளதா? என்று கவனிக்காமல் சாதாரணமாக இருப்பது ஆபத்துக்குறிய விடயம். இதுவே திருடர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே இந்த கொள்ளையர்களிடம் தமிழ் மக்கள் பறிகொடுத்த பொருட்களின் பெறுமதியை அளந்தால், அதை வைத்து ஒரு குட்டித் தீவையே வாங்கலாம்.
எனவே தங்களுடைய உடமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. பொறுப்பினை உணர்ந்து செயற்பட்டால் ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள முடியும்.