புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 5, 2019

புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!

ஈழத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியர் புலம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் பின்லாந்தில் வசித்து வந்த நிலையில்

அவரின் மகன் குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் , கடந்த 27.03.2019 அன்று குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

அவர் கடந்த வியாழக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இறப்பிற்கு ஈழத்தில் உள்ள செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், பின்லாந்தில் உள்ள அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம், பின்லாந்து தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்கள் சார்பாக இரங்கள் தெரிவிக்கப்பட்டு இறுதி வணக்க ஊர்வலம் இன்று நடைபெற்றுள்ளது.