சென்னையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த சிறுமி காயத்ரி (11). நேற்று மாலை ஐசிஎப் ராஜிவ்காந்தி நகர் முதலாவது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அருகே காயத்திரி நடந்து செல்லும் போது தீடீர் என்று பாழடைந்த கட்டிடத்தில் இருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.
இதில் காயத்திரி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் காயத்திரியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தகவல் அறிந்த பொலிசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது, 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிய நபர்கள் யார்? என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.