எதிர்த்து போராடினாள்! இரவு தாயின் கண்ணெதிரிலேயே மகளுக்கு நேர்ந்த பயங்கரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 20, 2019

எதிர்த்து போராடினாள்! இரவு தாயின் கண்ணெதிரிலேயே மகளுக்கு நேர்ந்த பயங்கரம்

பீகார் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடிய பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தாயின் மகளும் வீட்டுக்குள் இருந்தபோது இரவு 11 மணியளவில் , பக்கத்து வீட்டு நபரான பிரின்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரது கண்ணெதிரிலேயே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது மாணவி அதனை எதிர்த்து கடுமையாக போராடி தப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவி பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான பிரின்ஸ் பீகார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.