இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! வெளியான பின்னணி தகவல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 30, 2019

இலங்கை உட்பட இரு நாடுகளில் நடந்த குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! வெளியான பின்னணி தகவல்துபாயில் மனைவியுடன் வசிக்கும் நபர் ஒருவர் இலங்கை மற்றும் மும்பையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்பில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்தவர் அபிநவ். இவர் மனைவி நவ்ரூப்.

இருவரும் துபாயில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் தொழில் விடயமாக அபிநவ் மற்றும் நவ்ரூப் ஆகிய இருவரும் இலங்கைக்கு சில வாரங்களுக்கு முன்னர் வந்தனர்.

இருவரும் கொழும்பில் உள்ள சினமன் ஹொட்டலில் தங்கினார்கள்.

இந்த ஹொட்டலில் கடந்த 21ஆம் திகதி குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.அதாவது சம்பவத்தன்று, இருவரும் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு சினமன் ஹொட்டலுக்கு சென்றனர்.

அவர்கள் அங்கு செல்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தான் குண்டு வெடித்தது. இதனால் இருவரும் உயிர் தப்பித்தனர்.

அதே போல அபிநவ் கடந்த 2008-ல் மும்பையில் தங்கி படித்து வந்தார். அப்போது தான் 2008 நவம்பர் 26ஆம் திகதி தீவிரவாதிகள் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 164 பேர் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலின் போதும் அபிநவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிறுவயதில் இருந்து துபாயில் வசித்து வரும் அபிநவ் இரு முறை தான் அங்கிருந்து வேறுநாட்டுக்கு சென்றுள்ளார். அந்த இரண்டு முறையும் அவர் சென்ற இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இரண்டிலும் அவர் உயிர் பிழைத்துள்ளார்