இலங்கையில் தங்கியுள்ள சவுதி அரேபியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவு ஊடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு சவுதி தூதரகம் இந்த அறிக்கையை வெளிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினால் இலங்கையில் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்.
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற் கொண்டு சவுதி அரேபிய தூதரகம் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது