யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்