வௌிநாடு செல்லும் பயணிகளுக்கான அறிவித்தல்! கட்டுநாயக்க விமான நிலையம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

வௌிநாடு செல்லும் பயணிகளுக்கான அறிவித்தல்! கட்டுநாயக்க விமான நிலையம்


வௌிநாடுகளுக்கு செல்லவிருக்கும் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்.

வௌிநாடுகளுக்கு செல்லவிருக்கும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நான்கு மணித்தியாலத்திற்கு முன்னதாக வருகை தருமாறு விமான நிலைய கட்டுபாட்டு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மேலதிகமாக நபர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வரவேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும் வௌிநாடுகளுக்கு செல்லும் மற்றும் வௌிநாடுகளிலிருந்து வருகை தரும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்சந்தை பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவியுள்ள பதற்ற நிலையினை தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு வௌிநாடுகளுக்கு செல்லும் நபர்களை தவிர்ந்த ஏனையர்களை விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.