தொடர் குண்டுவெடிப்பு! உயிரிழப்பு 143ஐ எட்டியது, காயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

தொடர் குண்டுவெடிப்பு! உயிரிழப்பு 143ஐ எட்டியது, காயம்!

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், மட்டக்களப்பு சீலோம் தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, சினமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு வைத்தியசாலை 27 மரணங்கள், 75 பேர் காயம்,

கொழும்பு தேசிய வைத்தியசாலை 9 வெளிநாட்டவர் உட்பட 45 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை 64 மரணங்கள், 110 பேர் காயம், 75க்கும் மேற்பட்டோர் காயம்.

இந்த குண்டுவெடிப்பில் 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.