தமிழகத்தில் பேருந்து நிலையத்தில் செல்போனில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்ததாக இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்த நபர், பெண்கள் கூட்டமாக நிற்கும் இடங்களுக்கு அருகே சென்று செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த ஒரு வயதானப் பெண்மணி, அவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்டார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களும் இளைஞரை அடித்து உதைத்தனர்.
பேருந்து நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் இளைஞரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றார்.
அவரது செல்போனை ஆராய்ந்த போது பொலிசார் அதிர்ந்தனர், காரணம் அதில் அதில் பல பெண்களை ஆபாசமாக படம் பிடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் இளைஞர் பெயர் கலைமணி என்பதும் சென்னையிலுள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.