கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் மது என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுதர்சன யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரியில் இருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பாதி உடல் தீயில் கருகி, தூக்கில் தொங்கிய நிலையில் திவ்யாவின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை வந்த பின்னரே அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட மதுவும், சுதர்ஷன் யாதவும் காதலித்து வந்ததாக சக கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர், அதுமட்டுமின்றி, சுதர்ஷனின் தந்தைக்கு சொந்தமான நிலத்தில் மதுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தங்கள் மகளை யாரையும் காதலிக்கவில்லை என்றும் சுதர்ஷன் தங்கள் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மதுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மாணவியுடன் பயிலும் சக மாணவர்களிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. இதுகுறித்து நமக்கு தெரிந்தவற்றை எடுத்துரைக்கலாம் என்று பதிவிட்ட அவர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்துள்ளார்.