தற்கொலை குண்டுகளோடு வெடித்து சிதறிய அநேகர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிய வருகிறது. அப்கனிஸ்தான் பங்களாதேஸ் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தாத தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இதில் சங்கிரிலா நட்சத்திர விடுதி தற்கொலைதாரி ஶ்ரீலங்காவைச் சேர்ந்த சகரான் ஹசீம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தெமட்டகொடை குண்டை வெடிக்க வைத்துக் கொண்ட சம்பவம் , போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்த போதே நிகழ்ந்துள்ளது.
அந்த குண்டு வெடிப்பில் சீசீடீ உதவி போலீஸ் அதிகாரி ஒருவரும் இரு காண்ஸ்டபிள்களும் உயிர் துறந்துள்ளனர்.
இன்னொரு போலீஸ் கான்ஸ்டபிள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அங்கு குண்டை வெடிக்கச் செய்து கொண்ட மூவர் இறந்துள்ளனர். அங்கிருந்த ஒருவர் கைதாகியுள்ளார்.
தெகிவளை குண்டு வெடிப்பின் பின் ஒருவரும் பின்னர் நால்வரும் கைதாகியுள்ளனர். கைதாகியுள்ளோர் இலங்கையராவர்.