இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது.
இதில் 320 பேர் பலியானதோடு, 500க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதோடு அல்லாமல் இன்னும் சில அசம்பாவிதங்கள் நிகழலாம் என அரசு எச்சரித்ததோடு, அமெரிக்க புலன்விசாரணை அமைப்பும் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் பீதியிலேயே இருந்து வருகின்றனர்.