அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 23, 2019

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார்!

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மிகவும் ஆழமாக ஆராய்ந்து தீர்வு பெற்று கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாடு தற்போது சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது.

அதிலிருந்து விரைவில் மீளவேண்டும்.

காவற்துறைமா அதிபர் அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய செயற்பட வேண்டும்.

பாதுகாப்புச்சபை ஒரு மாதகாலமாக ஒன்று கூடவில்லை என கூறப்படுகின்றது.

எனவே அரசாங்கம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் அதேவேளை, அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.