ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வீடு புகுந்து கொள்ளை...கொள்ளையா்கள் அட்டகாசம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 23, 2019

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது வீடு புகுந்து கொள்ளை...கொள்ளையா்கள் அட்டகாசம்!

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது என வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி கோவிலாக்கண்டியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது மனைவியும் ஆசிரியர். வீட்டில் அவர்களுடன் மகளும் இருந்துள்ளார்.

நள்ளிரவு 12.30 மணியளவில் வீடுடைத்து உள்நுழைந்த 6 பேர், வீட்டிலிருந்த மூவரையும் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் அலுமாரியிலிருந்த நகை என மொத்தம் 28 பவுண் தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துத் தப்பித்தது. கொள்ளையர்கள் 6 பேரும் முகத்தைத் துணியால் மறைத்திருந்தனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.