மாணவியின் தவறான வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பினாரா? பெண்களை ஏமாற்றியது எப்படி? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

மாணவியின் தவறான வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பினாரா? பெண்களை ஏமாற்றியது எப்படி?

ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பினாரா என்பது குறித்து பொலிசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தின் காரணமாக, ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது பிறந்தநாள் என்று, அதற்கு விருந்து கொடுப்பதற்காக கல்லூரி மாணவியை சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றார்.

காரில் அழைத்து செல்கையில் பலமுறை சில்மிஷம் செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், ஹொட்டலுக்கு அழைத்து சென்று பலமுறை ஒன்றாக இருந்தததில் மாணவி கர்ப்பமானதையடுத்து, காரில் வைத்து தாலிகட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

பின்னர், அந்த மாணவியை அவரது நண்பர்களிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்தார்.

இதனால் பயந்துபோன மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், கல்லூரி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார்.

மாணவியின் புகாரின்படி ஈரோடு மகளிர் பொலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

அவரது கணனிகளை சோதனை செய்ததில் புகைப்படங்கள் கிடைத்துள்ளது, ஆனால் வீடியோக்கள் கிடைக்கவில்லை. அனை அனைத்தையும் அழித்துவிட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாணவியின் வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் இவருடன் இணைந்து செயல்பட்ட நண்பர்கள் யார்? என்பது குறித்து பொலிசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை வீழ்த்தியது எப்படி?

வசதியாக வாழ்ந்த ராதாகிருஷ்ணன் நாகரீகமாக ஆடை அணிந்து கொண்டு கல்லூரிப்பக்கம் போய் நின்றுகொள்வார். தன்னை பார்க்கும் மாணவிகளிடம் நைசாக பேச்சுக்கொடுத்து அவர்களை வர்ணித்து மயக்கிவிடுவாராம்.

மேலும், மாணவிகளிடம் மரியாதையாக பேசி அவர்களை போன் நம்பரை வாங்கி அதன்பின்னர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.