கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முக்கிய பகுதி கண்டுபிடிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 29, 2019

கொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முக்கிய பகுதி கண்டுபிடிப்புகொழும்பில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முக்கிய தளமாக செயற்பட்ட வீடொன்றை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியிலுள்ள வீடு கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள், பயங்கரவாதிகள் மற்றும் தெளஹீத் ஜமா அத் அமைப்பினரின் தகவல்கள் அடங்கிய டெப் கணினி ஒன்று, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளின் செயற்பாட்டுக்கு வீட்டினை வழங்கிய உரிமையாளரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடமொன்று உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.