யாழ் பல்கலையில் சற்றுமுன் மாணவ காவாலிகள் மாணவி ஒருவரின் மேலாடையை கழட்டியதால் பதட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

யாழ் பல்கலையில் சற்றுமுன் மாணவ காவாலிகள் மாணவி ஒருவரின் மேலாடையை கழட்டியதால் பதட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களை அடித்துக் கொண்டிருந்தனர். சிலர் மாணவி ஒருவரின் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது. அதை மாணவி ஒருவர் வீடியோ எடுக்க முற்பட்ட போது அந்த மாணவியை சிரேஸ்ட மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து தாக்குதலுக்குள்ளான மாணவி உடனடியாகவே பல்கலைக்கழக மார்சலிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த மார்சல் குறித்த வரவேற்பு நிகழ்வை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மாணவி மீது தாக்குதல் நடாத்திய மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த செயலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புத்தடை விதிக்கப்பட
வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் மௌனம் காப்பதும் தொடர்ந்து வருகின்றது.