கடமைக் காலப் பகுதியில் இராணுவ சேவையில் இருந்து தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் சேவையில் இணைந்து கொள்ளவும், தேவையானவர்களுக்கு இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்குமான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு காலவரையரை 2019 ஏப்ரல் 22 தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வௌியிடப்பட்டுள்ளது.