சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களை நம்ப வைத்து நடக்கும் பெரும் மோசடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 6, 2019

சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களை நம்ப வைத்து நடக்கும் பெரும் மோசடி!

சுவிட்சர்லாந்தில் பிரதானமான மாநிலங்கள் சிலவற்றில் மக்களை மூளை சலவை செய்து COIN எனும் பணம் வசுலிப்பு முறையில் மோசடி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணத்தை முதலீடு செய்வது தொடர்பில் மூளைசலவை செய்து இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பல இலட்சம் பிராங்குகளை சட்டத்திற்கு முரணான வகையில் அபகரித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் ஏமாற்றப்பட்ட சிலர் சூரிச் மாநில பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். எனினும் மேலும் பலர் பயத்தால் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை.

இதற்கு குறித்த ஏமாறும் கும்பல் முதலீடு செய்தவர்களின் அந்தரங்க விடயங்களை சேகரித்து வைத்து மிரட்டுவதே காரணம் என தெரியவருகிறது.

ஒட்டு மொத்தத்தில் பாதிக்கப்பட்ட பலர் என்ன முடிவை எடுப்பது என்பது தொடர்பில் தடுமாற்றமடைந்துள்ளனர்.

இதேவேளை ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலில் அடங்கும் சில மனைவிமார், கணவன்மாருக்கு தெரியாமல் பல ஆயிரக்கணக்கான சுவிஸ் பிராங்குகளை குறித்த மோசடி கும்பலிடம் முதலீடு செய்துள்ளனர்.

ஒட்டு மொத்தத்தில் திட்டமிட்டு பாரிய மோசடியில் ஈடுபட்டு வரும் இந்த கும்பல் தொடர்பில் சுவிஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.