புல்மோட்டை மீனவர்கள் கடற்படையினரால் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

புல்மோட்டை மீனவர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு செம்மலைக் கடற்பரப்பில் டைனமற் பயன் படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த புல்மோட்டை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீரியல்வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

செம்மலைக் கடற்பரப்பில் நார் இழைப் படகில் தடைசெய்யப்பட்ட வெடிமலுந்துகள் சகிதம் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த இருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட நீரியல்வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து டைன்ற் மற்றும் திரி என்பனவற்றுடன் மின் பிறப்பாக்கி மின் குமிழ்கள் என்பனவும் கைப்பட்டிருந்தன. குறித்த இரு மீனவர்களையும் சான்றுப் பொருட்களையும் திணைக்களம் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தினர்.குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி லெனின்குமார் மீனவர்கள் இருவரையும் எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்க மறியளில் வைக்க உத்தரவிட்டார்.