மக்களோடு மக்களாக காத்திருந்த விஜய்! தலைதெறிக்க ஓடிய அஜித் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

மக்களோடு மக்களாக காத்திருந்த விஜய்! தலைதெறிக்க ஓடிய அஜித்



சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்தார். அதேபோல் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்தார். மேலும் அஜித் மனைவி ஷாலினியும் தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 7.15 மணிக்கு தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

இதேபோல் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் 10 நிமிடத்திற்கும் மேலாக வரிசையில் பொறுமையாக நின்று தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கிய நிலையில் 7.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார்.