தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்களிப்பு- 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.
இங்கு, இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது.
தமிழ்நாட்டில் வேலூர் தவிர்ந்த ஏனைய 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் இன்று காலை தொடக்கம் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.
அதேவேளை தமிழ்நாட்டில், வெற்றிடமாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று இடம்பெறுகிறது.
இன்று காலை 7 மணி தொடக்கம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேவேளை, இன்று கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாம், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5, சட்டீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகளிலும் இன்று வாக்களிப்பு நடந்து வருகிறது