கொடூர கொலை..... லட்சக்கணக்கான பிணக்குவியல்கள் கண்டெடுப்பு: உலகை உலுக்கிய சம்பவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 16, 2019

கொடூர கொலை..... லட்சக்கணக்கான பிணக்குவியல்கள் கண்டெடுப்பு: உலகை உலுக்கிய சம்பவம்

1979ல் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை ஈராக்கின் அதிபராக சதாம் உசேன் இருந்தபோது அந்நாட்டில் அவர் நடத்திய சர்வாதிகார ஆட்சியால் குர்து இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக மக்களால் இன்று வரை மறக்கமுடியாத ஒரு சம்பவம் ஆகும்.

1973-ம் ஆண்டு, அமெரிக்க ஆதரவுடன் ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் சதாம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஈராக்கின் சமாவா நகருக்கு மேற்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாலைவனத்தில், மனித எலும்புக்கூடுகளின் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

988-ம் ஆண்டு சொந்த நாட்டின் குர்து இன மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களை ஏவினார் . லட்சக்கணக்கான அப்பாவி குர்து இன மக்கள் கொல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில் உயிரிழந்த மக்கள் பாலைவனப்பகுதியில் புதைக்கப்பட்டனர். அதில் ஒரு பிரேதக் குழிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மக்களிடையே பேசிய இராக் அதிபர் பர்ஹாம் சாலி, சதாம் உசேன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியை ஈராக் மக்கள் ஒருபோதும் மறந்துவிடமாட்டார்கள். பல்வேறு கொடுமைகளை அவர் மக்களுக்கு செய்துள்ளார் என கூறியுள்ளார்.