திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு அருகிலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 21 வயதுடையவரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
யுவதி ஒருவரை இரு இருளைஞர்கள் காதலித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தால் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் திருகோணமலை-நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்தரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரை கொலைசெய்த சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.