தேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, April 6, 2019

தேர்வுக்கு முந்தைய நாள் சிறுமியின் உடலில் திடீரென தோன்றிய சிவப்பு புள்ளிகள்: பின்னர் நடந்த சம்பவம்!

மறுநாள் தேர்வு ஒன்று இருக்கும் நிலையில் 6 வயது லில்லியின் உடலில் திடீரென சிவப்பு நிற புள்ளிகள் தோன்றின.

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, அம்மா உடல் முழுவதும் அரிக்கிறது என்று அவள் கூற, அம்மா அவளை உற்று கவனித்தார்.

சற்றுமுன்தான் அம்மாவிடம் வந்து சிவப்பு மார்க்கர் பேனாவை அவள் வாங்கிக் கொண்டு சென்றிருக்க, அம்மா சார்லட்டுக்கு, தன் குறும்புக்கார மகள் ஏதோ குறும்பு செய்திருக்கிறாள் என்பது புரிந்தது.

அம்மாவும் தெரியாதமாதிரி முகத்தை வைத்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்க, லில்லி, அம்மா நாளைக்கு நான் பள்ளிக்கு செல்லவில்லை, எனக்கு சிக்கன் பாக்ஸ் வந்திருக்கும் என்று நினைக்கிறேன், உடம்பெல்லாம் அரிக்கிறது என்று கூறியிருக்கிறாள்.


சார்லட்டுக்கும் அவரது கணவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை, என்றாலும் அடடா, 10 நிமிடத்திற்குள் சிக்கன் பாக்ஸ் வந்து விட்டதே, அப்படியானால் உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டுமே என்று கூறினால், அடுத்த விநாடி லில்லியைக் காணவில்லை.

எங்கே போனாள் என்று பார்த்தால் பாத்ரூமுக்குள் உட்கார்ந்து உடலை சோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்திருக்கிறாள் லில்லி.

பின்னர் அப்பாவும் அம்மாவும் என்ன நடந்ததென்று விசாரிக்க, தனக்கு மறுநாள் spelling test இருப்பதாகவும், தனக்கு அதில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை என்றும் அதனால் சிவப்பு மார்க்கரால் உடலில் புள்ளி வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.

தனது வகுப்புத் தோழிகள் சிலருக்கு சிக்கன் பாக்ஸ் வந்ததை தான் பார்த்ததாகவும், அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்றும் எனவேதான், தானும் அதேபோல் சிவப்பு புள்ளிகள் வைத்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறாள் லில்லி.

இதில் வேடிக்கை என்னவென்றால், லில்லி பயன்படுத்தியது ஒரு பெர்மனண்ட் மார்க்கர், எளிதில் அழியாது.

எனவே அடுத்த சில நாட்களுக்கு உடலில் சிவப்பு புள்ளிகளுடனேயே லில்லி நடமாட, பார்க்கிற எல்லாரிடமும் அவளுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்பதை விளக்கிச் சொல்லுவதற்குள் சார்லட்டுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்..