குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு!

சுத்தமான குடிநீர் கேட்கும் எங்களது கிராமத்திற்கு மதுபானசாலையா தீர்வு என கேட்டு கிளிநொச்சி பெரிய பரந்தன் கிராம மக்கள் ஐந்தாவது தடவையாக புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் 12 மணி வரை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக முன்றலில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக இந்த கவனயீர்ப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தங்களது பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கிராம மக்களும் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் கிராமத்தில் இவ்வாறு புதிய மதுபானசாலை ஒன்று அமைவது எமது வாழ்க்கையினை சீரழிக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். மது பழக்கத்தை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்படுவதற்கும் இது காரணமாக அமைந்துவிடும்.