எங்கே எமது சொந்தங்கள்?: வட்டுவாகலில் இராணுவத்திடம் ஒப்படைத்த இடத்தை நோக்கி படையெடுத்த மக்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

எங்கே எமது சொந்தங்கள்?: வட்டுவாகலில் இராணுவத்திடம் ஒப்படைத்த இடத்தை நோக்கி படையெடுத்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலை தருமாறு கோரி, அவர்களது உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 761 வது நாளாக இடம்பெற்றது.

இந்த நிலையில், தமது உறவுகளிற்கு என்ன நடந்ததென்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், ஜெனிவாவில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்து சர்வதேசம் தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், தங்களுக்கு நல்ல தீர்வைத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நகரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து, இறுதி யுத்தத்தின் முடிவில் படையினரிடம் தமது உறவுகளை கையளித்த வட்டுவாகல் வெட்டையை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, படையினரிடம் உறவுகளை கையளித்த இடத்தில் தமது உறவுகளின் படங்களை நாட்டி வைத்தனர்.