உறவுக்காரர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்... அடுத்து செய்த அதிர்ச்சி செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 8, 2019

உறவுக்காரர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்... அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

தமிழகத்தில் வீட்டில் வந்து தங்கிய உறவுக்கார பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் அதை தனது நண்பருக்கும் அனுப்பிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவர் மனைவி துர்கா (26). கரகாட்ட கலைஞராவார்.

இந்நிலையில் சேலத்தில் நடக்கும் கரகாட்ட நிகழ்ச்சியில் பங்குபெற துர்கா சென்ற நிலையில் தனது சொந்தக்காரர் ராஜ்குமார் வீட்டில் தங்கினார்.

சம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது அவருக்கு தெரியாமல் ராஜ்குமாரின் மகன் சிவா வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிவா அந்த வீடியோவை தனது நண்பர் குமாருக்கு அனுப்ப, குமார் அதை துர்காவின் கணவர் வரதராஜுக்கு அனுப்பினார்.

இதனால் குமாருக்கும் வரதராஜுக்கும் தகராறு வெடித்துள்ளது. அப்போது தான் சிவா வீடியோ எடுத்து செல்போன் மூலம் அவருக்கு அனுப்பி வைத்த விவரம் வெளியே வந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த வரதராஜ் சம்பவம் தொடர்பாக பொலிஸ் புகார் செய்தார். அதன் பேரில் பொலிசார் சிவா மற்றும் குமாரை கைது செய்துள்ளனர்