இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியை சிலர் நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகையை கீழே தள்ளி மிக கொடூரமாக தாக்கும் காணொளி பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.
இந்த நடிகை சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான ஒருவராகும். கடந்த சில நாட்களாக பல நாடகங்களிலும் அவர் நடித்து வந்தார்.
இதற்கு முன்னர் கேளிக்கை விடுதிகளில் மோதல்களில் ஈடுபட்ட இந்த நடிகையின் காணொளிகள் வெளியாகியிருந்தது.
இந்த நடிகையை தாக்கும் நபரே இது பியிமி ஹன்சமாலி என்பதனை உறுதி செய்துள்ளார்.
எனினும் இந்த காணொளியின் உண்மைத் தன்மை குறித்து பொலிஸார் எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.