கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியாவை சேர்ந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா - வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய இஸ்தார் முகமத நளிம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தினை வவுனியாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த இனைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிகளை மேற்கொண்டு குறித்த ஹோட்டலில் தொழில் புரிந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது