இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு... பலியான இந்திய பெண்ணின் புகைப்படம் வெளியானது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு... பலியான இந்திய பெண்ணின் புகைப்படம் வெளியானது

இலங்கையை உலுக்கிய வெடி குண்டு சம்பவத்தில் பரிதாபமாக இறந்த இந்திய பெண்ணின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

நாட்டின் தேவாலயம் மற்றும் ஹோட்டலிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 207 பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால் அதைப் பற்றி இன்னும் எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், அதைப் பற்றி தற்போது தெரிவிக்க முடியவில்லை.

இந்நிலையில் 207 பேரை பலி கொண்ட சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த Razeena Kukkady (58) என்ற பெண் பரிதாபமாக இறந்துள்ளார்.

இவருக்கு Abdul Khader Kukkady என்ற கணவர் உள்ளார். இவர் தன் கணவரை துபாய்க்கு வழி அனுப்புவதற்காக சிங்கரில்லா ஹோட்டலில் தங்கியிருந்த போது பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது...