உலகம் முழுவதும் ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு மாணவன் சிக்கியுள்ளான்.
லண்டனைச் சேர்ந்த Zain Qaiser, தனது புரோகிராமிங் திறமையைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் உள்ள ஆபாசப்படம் பார்ப்போரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.
விசாரணையில் அவன் இதுவரை 700,000 பவுண்டுகள் வரை லாபம் பார்த்திருக்கலாம் என்று தெரியவந்தாலும், உண்மையில் 4 மில்லியன் பவுண்டுகள் வரை அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவன் சம்பாதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட Qaiser (24)க்கு ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Qaiser, பிரித்தானியாவில் தண்டனை பெறும் மிக அதிக குற்றங்களை செய்த சைபர் கிரிமினல் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய கூட்டாளி ஒருவனின் உதவியுடன் குற்றங்கள் புரியும் Qaiser, ஆபாச இணையதளங்களில் ஒரு விளம்பர லிங்க் ஒன்றை வைத்திருப்பான்.
அதை யாராவது கிளிக் செய்துவிட்டால், உடனடியாக அவர்களது கணினி செயல்படாமல் நின்று விடுவதோடு, ஆபாச படம் பார்ப்பதை குடும்பத்தாருக்கு தெரிவித்து விடுவதாகவும், இதை பொலிசாரும் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறி, பணம் கேட்டு மிரட்டல் செய்தி ஒன்று வரும்.
தங்கள் குடும்பத்தாருக்கு தெரிந்து விடக்கூடாது என அஞ்சும் கணினி பயன்படுத்துவோர், கேட்ட தொகையை கொடுத்து விடுவார்கள்.
இப்படி சிக்கிய பலரும் நடந்ததைக் குறித்து பொலிசாரிடம் புகாரளிக்காத நிலையில், கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று Qaiserமீது புகாரளிக்க முன்வந்துள்ளதையடுத்து அவன் பொலிசில் சிக்கியுள்ளன்.
அவனது சிக்க வைக்கும் லிங்கை தங்கள் தளத்திலிருந்து அகற்றுமாறு அந்த நிறுவனம் Qaiserஐக் கேட்டுக் கொள்ள, மறுத்த அவன், அந்த நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்பை முடக்கி ஏராளமான பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவன் மீது புகாரளிக்கப்பட்டது.