திருமணமான சில மாதங்களில் வீட்டில் நிகழ்ந்த மரணம்.... மனைவியின் ராசி சரியில்லை என கூறி கணவன் செய்த செயல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

திருமணமான சில மாதங்களில் வீட்டில் நிகழ்ந்த மரணம்.... மனைவியின் ராசி சரியில்லை என கூறி கணவன் செய்த செயல்

சென்னையில் மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்த கணவன் மீண்டும் அவரை அழைத்து கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (28). இவருக்கும், பவித்ரா (23) என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆன சில மாதங்களில், ரமேஷ்குமாரின் தந்தை இறந்து விட்டார். மனைவி வந்த நேரம் சரியில்லை என்று பவித்ராவை, ரமேஷ்குமார் வீட்டில் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையில், பவித்ராவை, அவரின் தாய் வீட்டிற்கு ரமேஷ்குமார் அனுப்பி வைத்து, பின்னர் அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

மேலும், பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்து, 2 மாதம் ஆகியும் ரமேஷ்குமார், பவித்ராவை, தனது வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பவித்ராவுடன் குடும்பம் நடத்த ரமேஷ்குமார் மறுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ரமேஷ்குமார் வீட்டு முன்பு பவித்ரா, தனது குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பொலிசாரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.