வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது!வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பத்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கடும் சோதனையின் பின் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.