இலங்கையில் ஈஸ்டர் நாளில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலை கண்காணித்து வழிநடத்திய முக்கிய நபர் தொடர்பில் வீடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
குறித்த வீடியோவில் சிவப்பு வண்ண டி-ஷர்ட்டுடன் தோன்றும் அந்த நபரை இலங்கை பொலிசார் தீவிரமாக தேடிவருவதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சிவப்பு வண்ண டி-ஷர்ட்டுடன் தோன்றும் அந்த மர்ம நபரின் கட்டளையை ஏற்றே, தற்கொலை குண்டுதாரி செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் நுழைந்து தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.விசாரணையின் ஒருபகுதியாக தற்போது சிக்கியுள்ள அந்த வீடியோவை நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை தணிக்க உதவும் எனவும், அந்த பயங்கரவாத கும்பலை வேறுடன் அகற்ற பயன்படும் எனவும் பொலிஸ் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயம் அமைந்துள்ள வீதி வழியாக தற்கொலை வெடிகுண்டுதாரி நடந்து செல்கிறார், அந்த மர்ம நபர் ஒரு தூணின் மறைவில் நின்றுகொண்டு தமது மொபைலில் குறுந்தகவலை அனுப்புவதும் பெறுவதுமாக உள்ளார்.
அதேவேளையில், தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகள் நிரப்பிய முதுக்குப்பையுடன் நடந்து சென்றவாறே பதற்றத்துடன் தமது மொபைலில் கட்டளைகளை பெறுகிறார்.
மட்டுமின்றி தற்கொலை குண்டுதாரி அந்த மர்ம நபரை கடந்து செல்லும்போது, இருவரும் ஒருவருக்கு ஒருவர் மர்மமான முறையில் பார்த்துக்கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே செபாஸ்டியன் தேவாலயத்தில் குண்டுவெடிக்கும் ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் அந்த மர்ம சிவப்பு வண்ண உடை அணிந்தவர் அங்கிருந்து மாயமாகிறார்.
இந்த வீடியோவானது, இலங்கையில் இதுவரை நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் அனைத்தும் தனியொருவரால் தன்னிச்சையாக நடத்தப்பட்டவை அல்ல எனவும்,
ஒவ்வொரு குண்டுதாரியையும் ஒரு மர்ம நபர் அல்லது ஒரு குழு வழிநடத்தியது அல்லது கட்டளைகள் வழங்கியது எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சிவப்பு சட்டை மர்ம நபர் தொடர்பில் சாட்சியம் அளித்த பாதிரியார் Neville, அந்த நபர் உள்ளூர்க்காரர் எனவும், வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் அவர் மாயமானதாவும் தெரிவித்துள்ளார்.
இதே வெடிகுண்டுதாரி தான், தேவாலயத்தின் முன்பிருந்த சிறுமி ஒருவரை கொஞ்சிவிட்டு சென்றதாகவும் முன்னர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.