நீர்கொழும்பு தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

நீர்கொழும்பு தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டது!



கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்த மனித எச்சங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதலினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேவாலயம் முழுமையாக கழுவப்பட்டு புனிதம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலின் போது பலர் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

இந்த தாக்குதலினை தொடர்ந்து நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தது.


இதில், சுமார் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர். இது இலங்கை வரலாற்றில் கறுப்பு நாள் என்றே கூறலாம்.

இந்நிலையில், முப்படையினரின் உதவியுடன் தேவாலயத்தில் இருந்த அனைத்து அழுக்குகளும் அகற்றப்பட்டு மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனிதம் பெற்றுள்ளது.

இதேவேளை, தேவாலயத்தின் பல பகுதிகள் பாரியளவில் சேதம் அடைந்துள்ளதுடன், அப்பகுதியில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது.