இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார் என விசாரணைகளுடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
தெகிவளை விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜமீல் முகமட் அப்துல் லத்தீவ் சிரியா சென்றமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளர்என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
லத்தீவ் 2014 இல் சிரியாவின் ரக்காவிற்கு சென்றார் அவ்வேளை ரக்கா ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கியது வெளிநாட்டு தீவிரவாதிகள் பலர் அங்கு சென்றனர் என விசாரணையுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் அங்கு ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியாவின் நெய்ல்பிரகாஸ் மற்றும் ஜிகாதி ஜோன் என அழைக்கப்பட்ட பிரிட்டனின் முகமட் எம்வாஜியுடன் தன்னை சேர்த்துக்கொண்டார்என விசாரணையுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்..
எம்வாஜியே அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ்பொலி மற்றும் ஸ்டீபன் சொட்லொவ் கொல்லப்படுவதற்கு காரணமானவர் இவர் 2015 இல் அமெரிக்காவி;ன் ஆள்இல்லாத விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
லத்தீவ் பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவில் வானூர்தி பொறியலை பயின்றார்.அதேவேளை இவர் மூன்று அல்லது ஆறு மாதங்கள் சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளார் என அந்த நபர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அவர் இலங்கைக்கு அனுப்பபட்டார்எனவும் விசாரணைகளில் தொடர்புபட்ட அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துருக்கி சிரியா ஈராக்கிற்கு பயணம் மேற்கொண்டமை குறித்து மூன்று குண்டுதாரிகள் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு ஐஎஸ் அமைப்பினரை தொடர்புகொண்டு குண்டுதயாரிப்பது தகவல் தொடர்பாடல்களை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விடயங்களை பயின்றிருக்கலாம் என விசாரணைகளில் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.