மொஹமட் சஹ்ரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாதி காத்தான்குடியில் கைது - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, April 30, 2019

மொஹமட் சஹ்ரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாதி காத்தான்குடியில் கைதுஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் தம்பியுடன் ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த 38 வயதான அப்துல் கபூர் முகமது றிஸ்வின் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்கோடரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.