டிக் டாக்கை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

டிக் டாக்கை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்!டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கூகுள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலிலை தடை செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் டிக் டாக் ஆப்பை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள், மற்றும் ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் கடிதம் ஒன்றினை எழுதியிருந்தது.

தற்போது மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, நேற்று இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கி விட்டன.

இதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.